one day varied emotions

Baby boy…Smile without a reason, let it come out naturally from within your heart….for it reflects the happiness of your soul and that you are at peace with yourself

வெளியே போறதுக்கு நான் ரெடி…நீங்க தயாரா

I’m ready to go out … are you ready?

இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? அம்மா உன் சிகையலங்காரம் முடியவே முடியாதா?

How long you will take to get ready? Mom, your make up is never ending process!!!

Yay அம்மா ரெடி…அப்பா இப்போ போலாமா

Dad Mom is ready…can we go now at least?

நீ அம்மா கிட்ட அடி வாங்கறதுக்கு ரெடியா இருக்க போல இருக்கு. ரொம்ப தான் கொழுப்பை வளர்த்து வச்சுருக்கா உங்க அம்மா

I guess you are ready to get some beating from your Mom. She has really developed you with some high fat cholesterol?

ஆச்சர்யத்துடன்!!!…நான் என்ன அப்படி இப்போ சொல்லிட்டேன். அம்மா மேக்கப் ரொம்ப நேரம் ஆக்குறாங்க..அதை சொன்னது ஒரு குற்றமா

With surprise…what is that I have told now? All I told was that Mom is taking too much time for Make up? is that a crime?

அம்மாவை நக்கல் செய்யறதுக்கு உனக்கு அவ்வளவு தைரியமா…ஹ்ம்ம்ம் இவ்வளவு வருஷம் ஆகியும் எனக்கு உங்க அம்மாவை பார்த்து பேசறதுக்கு கூட தைரியம் இல்லப்பா

You sure have so much of courage to criticize your Mom … Hmmm, it’s been so many years, I do not even have the courage to look at your mother and talk

என்ன காரியம் செஞ்சுட்டேன் அப்பா. நீ இதெல்லாம் எனக்கு ட்ரைனிங் குடுக்க வேண்டாமா. இதெல்லாம் உன் தப்பு

What have I done Dad. Dad you should have trained me for this. This is all your fault

சொல்றதை சொல்லிட்டு இப்போ என் மேல பழி போடறியா. எப்படி இப்படி அம்மா மாதிரியே இருக்க.
நல்ல மாட்டினியா, அம்மா கிட்ட இத சொல்லி, நீ சொல்லி தான் நான் இப்படி சொன்னேன்னு சொல்றேன்

Whatever you have told now you are blaming me for this? How is it that you are just like your Mom

There you go Dad, now you got yourself hanged. Now I will tell Mom that you forced me to tell me like that

அடி படவா ராஸ்கல் என்ன ஒரு டபுள் கேம் ஆடுற இந்த வயசுலேயே…நம்பவே முடியலை

Hey Rascal, what a double game you are playing at this age itself…just unbelievable

அம்மா எல்லாம் இந்த மனுஷன் தான். இவர் தான் இப்படி சொல்லு, அப்படி சொல்லுன்னு என்ன ஏத்தி விட்டார். இப்போ பழி என் மேல போடறார். நம்பாதே உன் புருஷனை

Mom, it’s all because of this man…he only agitated and make me to say like this and like that. Now he is blaming me for all that. Don’t believe your husband…

கற்பூரம் அடிச்சு சாத்தியமா சொல்றேன் ….இது எல்லாத்துக்கும் மூல காரணம் இதோ அப்பாவி மாதிரி ஒரு மூஞ்சி வெச்சுட்டு ஒன்ன ஏமாத்தி கல்யாணம் பண்ணிருக்காரே ….அவர் தான்

I promise you by delighting a camphor…..this is all because of one person….the one that is looking so innocent and deceived you into marrying him….

மாட்டினியா ….இப்போ நல்ல மாட்டினியா ….அம்மா உன்ன இப்போ வச்சு செய்ய போறாங்க….தப்பிக்கவே முடியாது ராஜா

Now you got trapped…Mom will now take you to the cleaners….You just cannot escape, there is no escape route at all…..

என்ன முறைக்கற ….அம்மா கிட்ட நீ என்ன ரொம்ப மெரட்டற என்ன அடிக்கற அப்படின்னு அதையும் சொல்லுவேன்….என் கிட்ட மரியாதையா நடந்துக்கோ….இல்லனா நீ காலி

Why are you giving me that stern look….I will tell Mom that you are threatening and also beating me….better be respectful to me…if not, you are dead….

அம்மா – யார் அங்க என்ன சத்தம்…ஹ்ம்ம்ம் ….என்ன பத்தி என்ன பேச்சு நடக்கறது அங்க

Mom – What is that noise over there…..who is talking about me and what talk is going on over there?

அம்மா உன்ன பத்தி யார் இங்க பேசுவா அப்பாவை விட்டு. நான் உன்ன பத்தி எதாவது சொல்லுவேனா. எனக்கு அந்த தைரியம் உண்டா.

Mom who will talk about you other than Dad. Would I ever talk about you? Do I even have the guts to do that?

அம்மா – ஆமாண்டி செல்லக்குட்டி நீ எங்க என்ன பத்தி தப்ப பேசுவ. எல்லாம் உங்க அப்பா தான்…..எதாவது என்ன பத்தி சொல்லலேன்னா அவருக்கு பொழுதே போகாது

Mom – Yes my sweet baby, why would you ever talk about me. It’s always your Dad, unless he says something about me, his time will not pass…..

பாரும்மா நான் ரொம்ப நல்ல பையனா டிவி போட்டு என்ன பாக்குறேன்னு. இந்த அப்பா தான் கண்டதையும் பார்த்து குட்டி சுவர் ஆயிட்டார்…என்னையும் கெடுக்க பார்க்கிறார்….நான் உன் பையன் ஆச்சே விடுவேனா

Mom, see what I am watching on TV. Dad keeps watching all the dirty stuff and also tries to spoil me. Will I ever let that happen, never, because I am your son…

அப்பா – ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி என்ன ஒரு நடிப்பு மாஸ்டர் ….டேய் நீ பெரிய தில்லாலங்கிடி டா
மகன் – என்னப்பா சொல்ற….எனக்கு ஒண்ணுமே புரியலையே…நான் பாட்டுக்கு டிவி பார்த்துநல்ல விஷயம் எல்லாம் கத்துக்குறேன். நீ தான் என்ன உருப்படி இல்லாம பண்ண பாக்குறே

அம்மா – என்ன சின்ன பையனை அதட்டி உருட்டி மிரட்டி எல்லாம் பண்ண பாக்குறே….இதெல்லாம் உனக்கு கொஞ்சம் அதிகமா தெரியல

Dad – What an superlative acting….really you are a big con guy

Son – What are you saying Dad….I don’t understand what you are telling me…all I am doing is to watch TV and learn something….you are the one that’s trying to spoil me

Mom – Why are you trying to terrify a small boy…don’t you think it is too much…

அப்பா நம்மால் ஆன வேலை முடிஞ்சுது….ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு சின்ன சிடுக்கு போட்டாச்சு. இப்போ நம்மள யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க….நம்ம பாட்டுக்கு ஸ்வீட் எடுத்து கொண்டாடுவோம்

Wow, awesome…accomplished today’s mission of creating a friction between the two of them…now they will not focus on me for sometime….now it’s time to chill out by taking a sweet and having fun watching them fight…

எல்லா நாளும் இப்படியே போச்சுன்னா எப்படி இருக்கும்…வீடு ரெண்டா இருக்கும் அவங்களுக்கு….என்னக்கு கிளுகிளுப்பா இருக்கும்…நீங்களும் இந்த மாதிரி நாரதர் வேலை எதாவது பண்ணிகிட்டே இருங்க…..எதாவது ட்ரைனிங் வேணும்னா….இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…..

If everyday goes like this how will it be, house will be on fire, whereas I will be on a high….you also do some work like this all the time….if you need some training, call me on this no.

Hero of the movie – Anirud Karthik

Villain of the movie – Karthik (Dad)

Story, Screenplay and Direction – Vidya (Mom)