அம்மா – அனிருத் யாருக்கு போன் பண்ற
அனிருத் – அப்பாவுக்கு
அம்மா – எதுக்கு செல்ல குட்டி ….அப்பா ஆபீஸ் மீட்டிங்கில் இருப்பாங்க. இப்போ நீ போன் பண்ணா டிஸ்டர்ப் ஆகி கோவமா இருப்பர்
அனிருத் – பரவாயில்ல அப்பா தானே…..எப்போவுமே ஓராங்குட்டான் மாதிரி தான் இருக்கார்….இப்போ நான் போன் பண்ண அப்புறம் தான் அப்படி இருப்பாரா என்ன
அம்மா – நீ வர வர ரொம்ப ஓவர் லிமிட் தாண்டி பேசற …. வாங்க போற
அனிருத் – Chill Mom….

அனிருத் – ஹலோ யார் பேசறது
மேனேஜர் – போன் பண்ணினது நீங்க, மொதல்ல நீங்க யாருன்னு சொல்லிட்டு, என்ன வேணும்னு சொல்லுங்க
அனிருத் – என் பேரு அனிருத்…நான் என் அப்பாகிட்ட பேசணும்
மேனேஜர் – உங்க அப்பா பேரு என்ன
அனிருத் – எங்க அப்பா பேரு உம்முணாமூஞ்சி
மேனேஜர் – அப்படி யாரும் இங்க இல்லையே
அனிருத் – நல்ல யோசிச்சு பாருங்க….எப்போவுமே ஒருத்தர் உர்ர்ர்ர்ர்னு இருப்பாரே….அவர் தான் என்னோட அப்பா
மேனேஜர் – ஒ கார்த்திக் ஆ
அனிருத் – அவரே தான்

மேனேஜர் – அப்பு அவர் மீட்டிங்கில் இருக்கார்…இப்போ டிஸ்டர்ப் பண்ண முடியாது
அனிருத் – நான் இப்போவே பேசி ஆகணும்….
மேனேஜர் – இல்லன்னா
அனிருத் – நான் கார் எடுத்து டிரைவ் பண்ணி அங்க வருவேன்
மேனேஜர் – இருப்பா ….அவரை கூப்பிடறேன்

கார்த்திக் – என்ன வேணும் அனிருத்….எதுக்கு ஆபீசுக்கு போன் பண்ற
அனிருத் – அப்பா….நான் கார் ஓட்ட போறேன்
கார்த்திக் – அதிர்ச்சி!!!…என்னது கார் ஓட்ட போறயா
அனிருத் – ஆமாம் அப்பா….எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி
கார்த்திக் – எந்த கார்….என்ன கார்….அம்மா எங்க
அனிருத் – கூல் அப்பா…சும்மா டென்ஷன் ஆகம கேளு
கார்த்திக் – என்னது
அனிருத் – நான் என்னோட மூணு சக்கர வண்டிய கார் மாதிரி ஓட்ட போறேன்
கார்த்திக் – இதுக்கு இவ்வளவு சீன்…போடா
அனிருத் – நீ வேணும்னா உன் கார் குடு…அதையும் ஓட்டறேன்

அனிருத் – அம்மா….அப்பா என்ன கார் ஓட்டறதுக்கு ஓகே சொல்லிட்டா ….நீ வரையா
அம்மா – என்னது கார் ஓட்ட போறயா ….என்ன கார்…எந்த கார்
அனிருத் – என்ன அம்மா….அப்பா மாதிரியே கேட்கறயே ….நீங்க ரெண்டு பெரும் சொல்லி வச்சு பேசுவீங்களா
அம்மா – என்ன வெளயாடுறே….எத ஓட்ட போற
அனிருத் – என்னோட மூணு சக்கர வாகனத்தை….ஒரு சக்கரத்துல ஓட்ட போறேன்….நீயும் என் கூட வா…
அம்மா – சே போடா
அனிருத் – ஏன்….அப்பா கூட மட்டும் தான் போவியா….என் கூட வர மாட்டியா

அம்மா – அப்படி எல்லாம் இல்ல பட்டு
அனிருத் – சும்மா கதை விடாத….உனக்கு அப்பா தான் எல்லாம்…
அம்மா – இல்ல பட்டுரோசா ….நீ தான் என் உலகம்
அனிருத் – அப்போ என் கூட வா ….நான் ஒத்த சக்கரத்துல எப்படி வண்டி ஓட்டுறேன்னு பாரு
அம்மா – உங்க அப்பா வண்டி நாலு சக்கரத்துல ஓட்டும் போதே நெஞ்சு வெளிய வந்துடும்….இதுல இவன் வேற….ஒத்த சக்கரத்துல வண்டி ஓட்டுறானாம் ….அட கடுவுளே ….நீ தான் என்ன காப்பாத்தணும்
Anirud singing Roxette’s song….come on join the Joy ride….vrooom….here I come flying….
